வழிப்போக்கன்

வாழ்வெனும் வழித்தடத்தில் நான் காணும் காட்சிகள்

Friday, March 11, 2005

பின்னூட்டம் தொடர்பாக...

அனைவருக்கும் அன்பு வணக்கம்!
நான் பாலாஜி-பாரி.
blogspot பயன்படுத்துவோர்களின் ப்ளாக்கில் பின்னூட்டம் இட கடந்த இரு நாட்களாக சில பிரச்சினைகள் இருந்து வருகின்றது.
இதனையடுத்து அவர்களுக்கு இதை தெரியப்படுத்தினேன்.
அதன் விவரம் பின் வருமாறு.

I have been using the services of blogger.com in various ways. I am thankful to your services.Now there is a problem which i face. (ofcourse there were few more people)I was trying to give comment in my fellow bloggers blogs. But to my dismay i found i could not. I suspect some remodification is going on. If it is so, please put up a notice on http://www.blogger.com/... This is mere humble suggestion. The intention is to inform you about this problem so that you are aware of this. Also feel free to let me know if i can be of any help. :)
Thank you.
Balaji alias paari

இதற்கு அவர்களிடமிருந்து தானியங்கி பதில் வந்தது. அதன் விவரம் பின்வருமாறு...

Hi there,
We wanted to let you know that we've received your support request. Wemake every effort to respond quickly to all our users problems andquestions. While you're waiting for us to respond, please check Blogger Status to seeif anything's up with our system: http://status.blogger.com/ Also be sure to check the Known Issues page, which lists issues we'reaware of and working on: http://help.blogger.com/bin/answer.py?answer=791 Lastly you can browse Blogger Help - http://help.blogger.com/ - manycommon questions are answered there.

Thanks for your patience,
Blogger Support

அவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு இன்னும் நான் சென்று பார்க்கவில்லை. சங்கை ஊதியாகிவிட்டது என்ற தகவலை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். மேலும் தமிழ்மணம் மன்றத்தில் காசி அவர்கள் இட்ட சுட்டியையும் பார்க்கவும். நன்றிகள் அன்புடன் பாலாஜி-பாரி

Monday, February 14, 2005

ப்ளாக் ஒன்று கண்டேன்!!

http://blog.lib.umn.edu/j-jagu/nanotechnology/
இந்த தொடுப்பு எனது ஆய்வுக்காக நெட்-டை குடைந்து கொண்டிருந்த போது கிடைத்தது. என்னை வியப்புக்குள்ளாக்கியது என்னவென்றால், மினசோட்டா பல்கலைகழக நூலகம் தனது server-ல் blog-ஐ உருவாக்கி அதை ஒரு தகவல் திரள் களமாக பயன்படுத்துவதுதான். எனது குழு தலைவர் எங்கள் குழுவிற்கு ஒரு இணையதளம் செய்வது பற்றி சிந்திக்குமாறு கூறினார். இந்த blog-ஐ பார்த்தவுடன் ஏன் அது ஒரு blog-ஆக இருக்க கூடாது என தோன்றியது. இவ்வாறு ப்ளாக்காக வைக்கும் பட்சத்தில், இதில் உடனுக்குடன் post-செய்யவும் இயலும் எனத் தோன்றுகின்றது. எனக்கு இது தொடர்பாக ஏதேனும் மேல் விவரங்கள் (அஃது) இதில் உள்ள குறைகள் மற்றும் நலன்கள் பற்றி கூற இயலுமா?. இந்த மாதிரி ஒரு ப்ளாக் செய்த பின் அதை எங்கள் பல்கலைகழக server-ல் இடும் வசதி உள்ளது. suggestions please.....
PS: ப்ளாக்குகள் எப்படியெல்லாம் பயன் படுகின்றன என்று நினைத்தால் மலைக்காமல் இருக்க முடியவில்லை.

பாலாஜி-பாரி

Sunday, January 09, 2005

Jeyendirar....

He would be released on bail today by supreme court. I conclude like this based on the news from a website and from the court discussions.
But it will be other way if Mr. Tulsi comes up with concrete evidences and the video tape (It was mentioned that Jeyendirar had confessed on that tape).
But this incident should be seen in the light of various activities that the Mat has been engaged with. I hope truth stands tall in this issue.

valipokkan ( 4:30 AM IST)



Monday, December 06, 2004

அனாதை ஆனந்தன் கூறிய கருத்துக்கள் தொடர்பாக...

இப்பதிவிற்கு சுட்டிகள் வழங்கிய ரவி ஸ்ரீநிவாஸுக்கு என் நன்றிகள்.

அனாதை ஆனந்தன் தனது பதிவில் எவ்வாறு வர்ண பேதங்கள் தங்களுக்குள் இணைந்து தலித் மக்களின் நிலையை கட்டுபடுத்துகின்றது என்பதை கூறி இருந்தார். இதில் என் சந்தேகங்களுக்கு தக்க விளக்கம் அளிக்கும் வகையில் சில சுட்டிகளையும், சில புள்ளி விவரங்களையும் தந்திருந்தார்.

சமீபத்தில் நடை பெற்ற ஒரு மாநாட்டில் அநாதை ஆனந்தனின் கருத்துக்களின் நோக்கில் சில ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப்பட்டிருந்தது என்று அறிந்தேன். இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விளைகின்றேன். இந்த ஆய்வுகளின் பின்புலம் உடனடியாக தெரியாவிட்டாலும் இத்தகைய ஆய்வுகள் எப்படி மேற்கொள்ளப்படுகின்றது, இவை எதை நோக்கி செல்கின்றன என்பது தெளிவாகின்றது.
இந்த ஆய்வுகளின் முழு கட்டுரையும் கிட்டவில்லை. கட்டுரை சுருக்கம் மட்டுமே கிடைத்தது.

இந்த கருத்தரங்கில் நான்கு கட்டுரைகள்வாசிக்கப்பட்டது என அறிகின்றேன். முதல் கட்டுரையில், எவ்வாறு சொத்துள்ள நடுத்தர மக்களின் ஆதரவை பிஜேபி பெற்றது, மேலும் க்ஷத்ரியர்கள் மற்றும் படிடர்கள் (இவர்களை பற்றி என்னிடம் தகவல் இல்லை, தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்) எவ்வாறு பிஜேபி துணை நின்றனர் என்பதை பற்றிய ஒரு கண்ணோட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, அநாதை ஆனந்தன் கூறிய வழியில் ஓடும் சிந்தனையாகப்பட்டது.

இரண்டாவது கட்டுரையில், எவ்வாறு பிராந்தியத்துவம் குஜராத்தின் வகுப்பு வாத உணர்வோடு நயமாக பிணைக்கப்பட்டது என்பதை நிறுவுகின்றது. இது எனக்கு ஒரு புதிய செய்தியாக இருந்தது.

மூன்றாவது கட்டுரையில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி எவ்வாறு அடித்தட்டு மக்களின் ஆதரவை திரட்டியது என்பதான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவது கட்டுரையில், காந்தி குறித்தும், அவர் தனது இருப்பிடத்தில் இருந்து எவ்வாறு விலக்கப்பட்டார் என்பதை பற்றியும் ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது. எனக்கு இந்த கட்டுரை ஒரு நிறைவாக படவில்லை.

Thursday, December 02, 2004

பார் போற்றும் பாரதத்திலே டிசம்பர் 2- 3 ம் தேதியினிரவினிலே.

ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர் இந்த இரவில். குழந்தைகள்- பெண்கள்-ஆண்கள்-முதியோர்-விலங்குகள் இவர்களிடையே ஏற்றதாழ்வின்றி நடைபெற்ற ஒரு காரியம். ஆம் காரியம்தான்.

சம்பவம்: போபால் விஷ வாயு கசிவு

அதன் பின் இவர்களில் பிழைத்தோருக்கு உதவியாம், நீதியாம். மிகப் பெரிய வேடிக்கை. இறந்தவர்களின் எண்ணிக்கை பதினைந்தாயிரத்திற்கும் மேல். இன்றளவும் இவர்களுக்கு தரப்பட்ட நிவாரணத்தொகை இந்திய ரிசர்வ் வங்கியிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை கூட இவர்களுக்கு சலுகை என்று கொடுப்பவர்கள் சொன்னால் நவதுவாரங்களும் மூடப்பட்டு, தலையை ஆட்டும் ஓர் கூட்டம்.
எத்தனை பாரதிகள் தோன்ற வேண்டுமோ மக்கள் தம் நிலை உணர்ந்து கிளர்ந்தெள.
மேலும் விவரங்கட்கு


புஸ்சு கனடாவில் உரை நிகழ்த்தும் போது கூறுகின்றார்: "கனடியர்களே, உங்கள் பிரதமர் இரண்டாம் உலகப் போரின்போது, கனடாவில் தாக்குதல் நடக்காத போதும் போருக்கு படைகளை அனுப்பி, அதன் பின் அவர் கூறினார், எதிரிகள் நம்மை தாக்க வரும் வரையில் நாம் பொறுத்திருக்கலாகாது என்று"
அப்போ எனக்கு ஒரு கேள்வி: ஏனுங்க, எங்க ஊருக்குள்ளாற வந்து ஒரு இடத்த கட்டி, அதுல இருந்து விஷ வாயு வெளிப்பட்டு பதினஞ்சாயிரம் மக்க செத்து போச்சே, அதெல்லாம் என்னதுங்க? வெறும் விபத்தா? ஒரு மூவாயிரம் மக்க மேல ஏரோப்பிளேன விட்டா அது தீவிரவாதம். சரி. இதுக்கு என்னா சொல்வீங்கோ. இத ஏன் கேக்கறன்னா, உங்க ஊர்லயும் தான் கேஸ் நடந்து ஓடுங்கடான்னு முடுக்கி விட்டுடீங்களே அதுனால.(ஏதோ பதினாறாம் வட்ட செயலாளர், "நான் ஜார்ஜ் புஸ்சை கேட்கின்றேன்...".அப்படின்னு சொன்னமாதிரிதான் எனக்கு தோணிச்சு இத படிச்சுட்டு. ம்ஹூம்...)

Wednesday, December 01, 2004

சில கேள்விகளும், அதற்கான பதில்களும்...

இந்தப் பதிவு யாருடைய கேள்விக்கும் பதில் அல்ல ;-). இந்த சுட்டியில் மேலும் பல கேள்விகளும் அதற்கு தக்க, சரியான நேர்மையான பதில்களும் உள்ளது. இதை படித்து பிறகாவது தெளிவு கிடைக்கும் என நம்புகின்றேன்.

Monday, November 29, 2004

Seer has confessed to his involvement: Prosecution

THIS IS FROM REDIFF

The Tamil Nadu government on Monday informed the Madras high court that Kanchi Seer Jayendra Saraswati "broke down" during his interrogation and "confessed to his involvement" in the murder of Sankararaman, a temple official.Opposing the Seer's bail application, prosecution lawyer K T S Tulsi informed the court that in the interrogation, which has been videographed, the seer "seems to be now realising that it was a mistake."Arguments on the bail application before Justice R Balasubramaniam will continue on Tuesday.